NATIONAL

கிஷோனா சீ விளையாட்டு பூப்பந்து போட்டியில் தங்கம் வென்றார் !!!

மணிலா, டிசம்பர் 9:

மலேசிய பூப்பந்து வீராங்கணை எஸ்.கிஷோனா இந்தோனிசியாவின் ருசெல்லி ஹர்த்தாவானை வென்று மலேசிய பூப்பந்து அணிக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். மலேசிய பூப்பந்து விளையாட்டு சரித்திரத்தில் இதுவே முதல்முறை இந்திய மகளிர் ஒருவர் தங்கம் வென்றுள்ளது சமுதாயத்திற்கு பெருமை அளிக்கிறது.

முதல் ஆட்டத்தில் 22-20 என்ற புள்ளிகளில் பின் தங்கினாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்டங்களில் முறையே 21-14 மற்றும் 21-13 என்ற புள்ளிகளில் ருசெல்லியை வென்று முதல் தங்கத்தைப் பெற்றுள்ளார்.


Pengarang :