西蒂玛丽雅。
SELANGOR

குடும்ப வன்முறையை எதிர்கொள்ள ஒன்றிணைந்த சமூக பாதுகாப்பு திட்டம்

ஷா ஆலம், டிச.10-

குடும்ப விவகாரங்களை உட்படுத்தும் குடும்ப வன்முறையை கையாள்வதற்காக ஒன்றிணைந்த சமூக பாதுகாப்பு திட்டத்தைத் தோற்றுவித்த முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது. சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் மகளிர் உதவி அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் ஒரு முன்னோடி திட்டமாகும் என்று சுகாதாரம், சமூகம், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஹ்முட் கூறினார்.

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்த விவரங்களை அடிமட்ட நிலையில் சமூகத்தினர் வெகு விரைவாக துல்லியமான தகவல்களைப் பெறுவர் என்றார் அவர்.
“ஐக்கிய நாட்டு அறிக்கையின்படி, சுமார் 15 விழுக்காட்டு பெண்கள் குடும்ப வன்முறையை எதிர்நோக்கியுள்ளனர்” என்றார்.

“இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் கிடைக்கப்பெற்ற குடும்ப வன்முறை சம்பந்தப்பட்ட 340 புகார்களில் 27 விழுக்காடு அல்லது 91 புகார்கள் சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்டதாக சமூக நல இலாகா அறிக்கை தெரிவிப்பதாக” அவர் சொன்னார்.


Pengarang :