pada persidangan ‘Petaling Jaya Waste Summit 2019’
PBTSELANGOR

குப்பைகள் சேகரிப்புக்காக எம்பிபிஜே ரி.ம. 85 மில்லியன் செலவு

பெட்டாலிங் ஜெயா, டிச. 6-

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) மறுசுழற்சி திட்டத்தைப் பல்வகைப்படுத்தும் முயற்சியை மேம்படுத்தும் கடப்பாட்டைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.  குப்பை சேகரிப்பு மற்றும் பொது இடங்களைத் துப்புரவு செய்யும் பணிக்கான செலவை மிச்சப்படுத்தவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று டத்தோ பண்டார் டத்தோ முகமது சாயூத்தி பாக்கார் கூறினார்.

“கடந்த ஆண்டு எம்பிபிஜே குப்பை சேகரிப்பு மற்றும் பொது இடங்களைத் துப்புரவு செய்யும் பணிக்காக 85 மில்லியன் ரிஙிட்டைச் செலவிட்டது. அதே சமயம், குப்பை அழிப்பு இடத்திற்கான கட்டணமாக 12 மில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டது” என்றார் அவர்.

” குறைந்த அளவிலான கரியமிலவாயு பயனீட்டைக் கொண்ட மாநகர் இலக்கை அடையும் எம்பிபிஜே திட்டத்தில் முக்கிய அம்சமாக திடப் பொருள் நிர்வாகம் விளங்குகிறது. காரணம்
கரியமிலவாயு பயனீட்டைக் குறைப்பதில் இத்துறை 8 விழுக்காடு பங்களிப்பை வழங்கியுள்ளது” என்று அண்மையில் 2019 பெட்டாலிங் ஜெயா கழிவு உச்சநிலை மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.


Pengarang :