SEREMBAN, 14 Dis — Menteri Pengangkutan Anthony Loke Siew Fook mendengar penerangan dari Timbalan Pengurus Kanan Jabatan Keselamatan Trafik PLUS Malaysia Berhad Yusoff Ahmad (depan, kiri) mengenai statistik kadar kemalangan jalan raya di lebuhraya Plus pada Majlis Pelancaran KLIK Untuk Keselamatan Komuniti di sebuah pusat beli belah hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

குழந்தை பாதுகாப்பு இருக்கை 6 மாதங்களுக்கு பிறகே சட்டபூர்வமாக ஆக்கப்படும் !!!

கோலா லம்பூர், டிசம்பர் 14:

ஒவ்வொரு தனி நபர் காரிலும் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகளை (சிஆர்எஸ்பயன்படுத்துவது தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் ஆறு மாதங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னரே சட்டபூர்வமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சீவ் பூக் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை வலியுறுத்திஇந்த சட்டம் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும்பாதுகாப்பு குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த முதல் ஆறு மாதங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், அதற்கு கீழ்ப்படியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நான் அபராதங்களில் கவனம் செலுத்த விரும்பவில்லைஆறு மாதங்களாக நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று கூறினோம்ஆனால் அதன் பின்னர் அச்சட்டம் அமல்படுத்தப்படாவிட்டால், (பின்னர்அச்சட்டம் இயங்காது, ”என்று அவர் இன்று சனிக்கிழமை  செய்தியாளர்களிடம் கூறினார்.


Pengarang :