Majlis Graduasi Hos Komuniti, pada 7 Oktober lalu
SELANGOR

செப்டம்பர் மாதம் வரையில் 5.38 மில்லியன் சுற்றுப் பயணிகள் சிலாங்கூருக்கு வருகை

ஷா ஆலம், டிச.10-

சிலாங்கூர் மாநிலத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வருகைப் புரிந்தவர்களைக் காட்டிலும் இவ்வாண்டு அதே காலக் கட்டத்தில் 5.38 மில்லியன் பேர் வருகைப் புரிந்துள்ளனர். இது கடந்த ஆண்டு பதிவு செய்த எண்ணிக்கையை விட 4 விழுக்காடு அதிகமாகும்.

இவ்வாண்டு மொத்தம் 7.7 மில்லியன் சுற்றுப் பயணிகளை சிலாங்கூருக்கு வருகைப் புரிவர் மாநில அரசு இலக்கு கொண்டிருப்பதாக கலாச்சார, சுற்றுலா, மலாய் பாரம்பரிய கலாச்சார துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அஸாரி கூறினார்.

“2020ஆம் ஆண்டிற்கு , மாநில அரசு 7.7 மில்லியன் சுற்றுப் பயணிகள் வருகையளிப்பர் என்ற இலக்கை கொண்டுள்ளது. இது 2020 மலேசியாவிற்கு வருகைப் புரியும் ஆண்டிற்கு ஏற்ப அமைந்துள்ளதாக” அவர் சொன்னார்.
முன்னதாக, இவ்வாண்டு 9 மில்லியன் சுற்றுப் பயணிகள் மாநிலத்திற்கு வருகைப் புரிவர் என்றும் அதன் மூலம் 10 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைக்கும் என்றும் சிலாங்கூர் சுற்றுலா துறை எதிர்பார்த்தது.


Pengarang :