NATIONAL

போலீஸ் அதிரடி சோதனையில் ரி.ம. 4.3 மில்லியன் போதைப் பொருள் பிடிபட்டது

கோலாலம்பூர், டிச,27-

சிலாங்கூர், காஜாங், புக்கிட் சுங்கை லோங் வீடமைப்புப் பகுதியில் போலீஸ் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 4.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கெத்தாமின் போதைப் பொருளைக் கைப்பற்றியதோடு 3 உள்நாட்டு ஆடவர்களையும் கைது செய்தனர்.

போதைப் பொருள் குற்றவியல் புலன் விசாரணைப் பிரிவுப் படை இரவு மணி 7.30க்கு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 96.55 கிலோகிராம் எடையிலான போதைப் பற்றப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ நூர் அஸாம் ஜமாலுடின் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஆடவர்கள் 32 முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் சமையற்காரர், சமையல் உதவியாளர் வேலையில் இருக்கும் அவர்கள் போதைப் பொருள் கும்பல் தலைவனின் கையாளாகவும் செயல்பட்டு வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இவற்றோடு எரிவாயு தோம்பு, இலக்கவியல் எடை காட்டி உட்பட தோயோத்தா மற்றும் புரோட்டோன் வீரா ரக கார்களையும் பறிமுதல் செய்ததோடு 254,819.90 ரிங்கிட் ரொக்கத்தையும் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட ஆடவர்களின் சிறுநீரைச் சோதனை செய்ததில் அவர்கள் அனைவரும் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர்கள் மூவரும் டிசம்பர் 25 முதல் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :