Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari menyampaikan ucapan sembah taat setia kepada DYMM Sultan Selangor, Sultan Sharafuddin Idris Shah di Balairung Seri, Istana Alam Shah, Klang sempena Hari Keputeraan baginda ke 74. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANASELANGOR

மாநில அரசாங்கத்தின் வழிகாட்டியாக சுல்தான் ஷராஃபுடின்

மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹஜ் இப்னி அல்மார்ஹும் சுல்தான் சாலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா அல்ஹஜ் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிக்கின் ஆகியோரைப் பணிந்து
பொது மக்கள், மாநில அரசாங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்களுக்கு 74ஆவது பிறந்த தின நல்வாழ்த்துக்களை அடியேன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேன்மைமிக்க துவாங்கு சுல்தானின் ஆட்சியில் வாழ்வதற்கு அனுமதித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு அடியேனும் அனைத்து பொது மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சிலாங்கூர் நிர்வாகத்திற்கு தலைமையேற்க அடியேனுக்கு துவாங்கு அவர்கள் பெரிய மனம் கொண்டு அனுமதி வழங்கியுள்ளீர்கள், தங்களின் தலைமைக்கு கீழ் வாழ்வதில் அடியேனும் பொது மக்களும் பெருமிதம் கொள்கிறோம்.

இம்மாநிலமானது சுறுசுறுப்பாகவும் திறமையோடு இயங்கும் ஒரு கப்பல் என்றால், பெரிய கனவுகளுடன் சுறுசுறுப்பாக இயங்கும் பூகிஸ் மக்களின் பிரினிசி பேழைக்கு ஒப்பானதாகும்.
‘பிரினிசி’ என்றழைக்கப்படும் இப்பேழையின் பெயரில் இரண்டு வார்த்தைகள் இணைந்துள்ளன. ‘பிசுறு’ என்பது நல்ல மனிதர்கள் என்று பொருள்படும். ‘பினிசி’ என்பது சுறுசுறுப்பான ஒரு மீன் வகையாகும். எனவே, துணிவோடும் போட்டியிடும் தன்மையோடும் சிலாங்கூர் பயணிப்பதை உறுதி செய்ய அடியேனும் நிர்வாகத்தினர் அனைவரும் மேன்மைத் தங்கிய சுல்தானை மாலுமியைக் கொண்டு எத்திசைக்கும் பயணிக்கத் தயாராக இருக்கிறோம்.


Pengarang :