NATIONAL

மைஹோம்’ திட்டம் சரியாக நிர்வகிக்கப்படவில்லை!

கோலாலம்பூர், டிச.2-

திறமையாக நிர்வகிக்கப்பட்ட போதிலும் தனியார் கட்டுப்படி வீடமைப்புத் திட்டத்தின் (மைஹோம்) இலக்கு நிறைவேறவில்லை என்று 2018ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வாளர் அறிக்கையின் இரண்டாம் பாகம் கூறியது. அதேவேளையில், அத்திட்ட அமலாக்கம் மீதான கண்காணிப்பு நடவடிக்கை சரியாக நிர்வகிக்கப்படாததால், அவற்றின் கட்டுமானப் பணி தாமதம், மேம்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்பு தொகை சந்தேகத்திற்கு உரியதாக இருப்பதோடு அவை வீட்டை கொள்முதல் செய்தவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளன என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

மற்றொரு நிலவரத்தில் 10,000 மைஹோம் வீடுகள் 2020 வாக்கில் கட்டிமுடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்கு வகுக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி வரையில் 2,458 வீடுகள் ( 34.3%) நிறைவுபெற்ற வேளையில் எஞ்சிய 4.715 வீடுகள் (65.7%) வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன என்றும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டியது.
அதேவேளையில், தேசிய வீடமைப்பு இலாகா கோரிக்கை உத்தரவாஇ வெளியிட்ட பின்னரும் 2.35 மில்லியன் ரிங்கிட் இன்னும் திரும்பச் செலுத்தப்படாமல் உள்ளன.


Pengarang :