KUALA LUMPUR, 18 Nov — Timbalan Perdana Menteri Datuk Seri Dr Wan Azizah Wan Ismail berucap pada Majlis Pelancaran Bantuan Metro Prihatin di Balai Berita NSTP hari ini. Tabung Kemanusiaan Media Prima-NSTP, Bantuan Metro Prihatin akan mengumpulkan dana bagi membantu golongan kurang bernasib baik dan pesakit-pesakit kronik yang memerlukan wang bagi membiayai kos rawatan mereka. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

வரும் சனி, ஞாயிறு இரு தினங்களும் மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம் – துணைப் பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா, டிச.3-

2019 தேசிய மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7,8) ஆகிய இரு கிழமையிலும் பிராசாரனா மலேசியா நிறுவனத்தின் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளியுடன் செல்லும் பயணியும் கட்டணமின்றி பயணிக்கலாம்.

இந்த கட்டணச் சலுகை எம்ஆர்டி, மோனோரயில் மற்றும் எல் ஆர்டி ஆகிய போக்குவரத்து சேவைகளில் வழங்கப்படும் என்று 2019 தேசிய மாற்றுத் திறனாளிகள் தனித்தையொட்டி நடைபெற்ற மாற்றுத் திறனாளியுடானான விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீஸா அறிவித்தார்.

இந்தச் சேவையைப் பயன்படுத்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் அட்டைகளைக் காண்பித்தால் போதுமானது என்று மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான வான் அஜீஸா தெரிவித்தார். அவரது உரையை அவரது துணை அமைச்சரான ஹன்னா இயோ வாசித்ததோடு அவரது சார்பில் அத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகவும் தொடக்கி வைத்தார்.
கிழக்கு கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைப் பார்வையிட டாக்டர் வான் அஜீஸா அங்கு சென்றுள்ளார்.


Pengarang :