Datuk Dr Noor Hisham Abdullah
NATIONAL

வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்- சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்,டிசம்பர் 14 :

மலேசியாவில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் முயற்சியில்  நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார இயக்குனர் டத்தோ நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். வெளி நாட்டினருக்கான தடுப்பூசி பொருட்களைப் பெறுவதற்கு சுகாதார அமைச்சும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்ஒத்துழைப்பைக் கோரும் என்று அவர் கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மலிவான தடுப்பூசி பொருட்கள் கிடைப்பதால்தடுப்பூசி அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து ஒத்துழைப்பைப் பெற அமைச்சகம் முயற்சிக்கும் என்று அவர் கூறினார்.

மலேசியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒரு கூட்டு நிறுவப்பட வேண்டி உள்ளதுஏனெனில் மலேசியாவில் நமக்கு மலிவான தடுப்பூசிகள் வழங்கப்படவில்லைஆனால், பிலிப்பைன்ஸில் அவை மலிவாக கிடைக்கிறது. வெளிநாட்டினருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தடுப்பூசி பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.” என்று அவர் கூறினார்.

யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இந்த தடுப்பூசியை வெளிநாட்டினருக்கு மானியமாகப் பெறவும் அரசாங்கம் முயற்சிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :