Mulai tahun depan semua pelajar sekolah rendah di seluruh negara diberi sarapan percuma secara berperingkat.
NATIONAL

இன்று முதல் 4000 பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு !!!

கோலாலம்பூர், ஜனவரி 20:

இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மேம்பட்ட துணை உணவுத் திட்டத்திற்கு (இ.எஸ்.எஃப்.பி) தகுதியுள்ள மாணவர்கள் இலவச உணவை பெற்று பயனடைவார்கள்.

தொடக்கப் பள்ளியில் உள்ள ஏழை மாணவர்கள், ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் ஒராங் அஸ்லி பள்ளிகளில் உள்ளவர்களை குறிவைக்கிறது இத்திட்டம்.

தொடக்க கட்டத்தில், மேற்குறிப்பிடப்பட்ட இலக்கு குழுவைச் சேர்ந்த 4,000 மாணவர்களுக்கு  பள்ளி சிற்றுண்டிச்சாலைகளில் தயாரிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சத்தான உணவுகள் கிடைக்கும். பாடங்கள் தொடங்குவதற்கு முன்பு இலக்கு குழு மாணவர்கள் ஆரோக்கியமான உணவை அனுபவிப்பார்கள் என்று கூறினார் கல்வி இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹபீபா அப்துல் ரஹீம் அவர்கள்.

இந்த திட்டம் 1979 முதல் நாடு முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கல்வி அமைச்சகம்  அறிமுகப்படுத்திய துணை உணவுத் திட்டத்தின் (ஆர்.எம்.டி.) விரிவாக்கமாகும். காலையில் இயங்கும் பள்ளிகளுக்கு காலை 7 மணி முதல் காலை 7.30 மணி வரையிலும் பிற்பகலில் இயங்கும் பள்ளிகளுக்கு மதியம் 12.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் உணவு வழங்கப்படுகிறது.

“முன்னதாக, ஆர்.எம்.டி. திட்டத்தின் கீழ், இடைவேளையின் போது மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தின் மூலம், மாணவர்கள் வகுப்பில் சிறப்பாக கவனம் செலுத்துவதற்கு பாடங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே அவர்களின் உணவை உண்ணுமாறு ஊக்குவிக்க விரும்புகிறோம், ”என்று அவர் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார். .

மாவட்ட கல்வி அலுவலகங்களிலிருந்து (பிபிடி) பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இம்மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹபீபா மேலும்  கூறினார்.


Pengarang :