SELANGOR

இலவச பேருந்து செல்லும் கூடுதல் பாதை ரமலான் மாதத்தில் தயாராகிவிடும்!

பத்து கேவ்ஸ், ஜன.24-

சுங்கை துவா சட்டமன்ற தொகுதியில் சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து செல்லும் சாலைகளின் தரம் உயர்த்தும் பணி ரம்லானுக்குள் நிறைவு பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலைகள் கிராமப் பகுதிகளை ஜாலான் உலு யாம் முக்கிய சாலையுடன் இணைக்கும் என்பதால் மேலும் அதிகமானோர் இலவச பேருந்து சேவையால் பயனடைவர் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இந்தப் பேருந்து சேவையை அதிகரிக்கும் இறுதி கட்டத்தில் நாம் உள்ளோம். ரமலான் மாதத்திற்கு முன்னர் அல்லது பின்னர் கிராமப் பகுதிகள்ளை முக்கிய சாலையுடன் இணைக்கும் பாதைகளின் தரம் உயர்த்தும் பணி நிறைவுறும்” என்றார் அவர்.
“இதற்கு முக்கிய சாலைகளின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

இப்போது உள்ளூர் மக்களுக்கு வசதியான சேவையை வழங்குவது மீது கவனம் செலுத்தப்படுகிறது” என்று கம்போங் நக்கோடாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் அமிருடின் கூறினார்.
முன்னதாக, கூடுதலாக ஒரு பேருந்துவை கொள்முதல் செய்வதற்கும் புதிய பாதைகளை மேம்படுத்துவதற்கும் 300,000 ரிங்கிட் செலவிட்ப்படும் என்றார் அவர்.


Pengarang :