PBTSELANGOR

எம்டிகேஎஸ்: வாகன நிறுத்துமிட அபராதங்களுக்கு 50% கழிவு!

ஷா ஆலம், ஜன.31-

வாகன நிறுத்துமிட அபராதங்களை பிப்ரவரி1 தேதி தொடங்கி பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 50 விழுக்காடு கழிவை கோலசிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகேஎஸ்) வழங்கவிருக்கிறது. இந்தச் சலுகை கால கட்டத்திற்குப் பின்னர் அபராதம் செலுத்தாதவர்கள் மீது எம்டிகேஎஸ் நடவடிக்கை எடுக்கும் என்பதால் இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மன்றத்தின் தலைவர் ராஹிலா ரஹ்மாட் கேட்டுக் கொண்டார்.

“குற்றப் பதிவு வெளியிட்டு 24 மணி நேரம் கடந்த அனைத்து வாகனங்களும் இந்தச் சலுகைக்குத் தகுதி பெற்றுள்ளன” என்று அவர் விவரித்தார். எனினும். குற்றப் பதிவு வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அபராதம் செலுத்துவோர் இந்தச் சலுகைக்கு உட்பட மாட்டார்கள்” என்றார் அவர்.
இது குறித்த மேல் விபரங்களுக்கு, பொது மக்கள் எம்டிகேஎஸ் சட்டப்பிரிவை 09-32897385 இணைப்பு எண் 30,31 அல்லது 31 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :