Perdana Menteri Tun Dr Mahathir Mohamad semalam mempengerusikan mesyuarat pertama Majlis Produktiviti Negara (MPN) bagi tahun 2020. Foto Twitter
NATIONALRENCANA PILIHAN

எம்பிஎன் முதலாவது கூட்டத்திற்கு பிரதமர் தலைமையேற்றார்

கோலாலம்பூர், ஜன.22-

2020ஆம் ஆண்டின் தேசிய உற்பத்தி மன்றத்தின் (எம்பிஎன்) முதலாவது கூட்டம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
2030 கூட்டு வளப்பத்தை நோக்கி எனும் இலக்கை அடைவதற்கு நாட்டின் பொருளாதாரம் அனைவரையும் உள்ளடக்கி மேம்பாடடைவதற்கான வியூகங்களை வகுக்கும் ஒரு தளமாக எம்பிஎன் அமைவதாக தேசிய தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ முகமது ஜுகி அலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியை மேம்படுத்த 2019ஆம் பிப்ரவரி மாதம் எம்பிஎன் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டதாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

அனைத்து நிலையிலும் உற்பத்தி துறை எதிர்நோக்கும் பிரச்னைகளை அடையாளம் காண்பதற்காக எம்பிஎன் உறுப்பினர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அனுபவமிக்கவர்களும் ஆற்றல்மிக்கவர்களும் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.


Pengarang :