SELANGOR

ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை சிலாங்கூர் வகுத்துள்ளது!

காஜாங், ஜன.20-

ஏழ்மையில் வாழ்வோர் அந்தச் சூழலிருந்து வெளியேறுவதை சிலாங்கூர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது என்று சமூக பொருளாதாரம் மற்றும் பரவுமிக்க அரசாங்கத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ் தெரிவித்தார்.
உதாரணமாக, ஏழ்மை ஒழிப்பு வரைவு திட்டத்தின் கீழ் தங்கள் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தொழில்முனைவர் உதவித் திட்டம் ஊக்குவிக்கப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“இது குறித்து விவாதிக்க மாநிலத்தில் உள்ள கிராமத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்த விருக்கிறேன். அதே வேளையில், இதற்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வர்த்தகர்களுக்கும் நம்மால் உதவ இயல்கிறது” என்றார் அவர்.
இத்தரப்பினர் மீது நாம் கவனம் செலுத்துவதால், எதிர்காலத்தில் இவர்கள் ஏழ்மை வட்டத்தில் இருந்து வெளியேறுவதோடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என்று இங்குள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற சிலாங்கூர் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தெரிவித்தார்.

அதே வேளையில், இந்திய சமூகத்தின் அர் குறிப்பாக தோட்டப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்களின் கல்வி கேள்விகளில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
“மாதம் ஒன்றுக்கு 1.500 ரிங்கிட்டும் குறைவாக மாத வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பேருந்து கட்டணம் செலுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவிவதன் மூலம், இத்தலைமுறையினர் எதிர்காலத்தில் தங்கள் குடும்பத்திற்கு உதவிட வழி வகுக்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :