SELANGOR

ஐ-அசோ திட்டம் அறிமுகம் -1,000 பணிப் பெண்களைப் பதிய இலக்கு

ஷா ஆலம், ஜன.8-

சிலாங்கூர் குழந்தைகள் அறவாரியம் (யாவாஸ்) இம்மாதம் 18 ஆம் தேதி ஐ-அசோ திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கம்போங் ஜெஞ்சாரோம் பொது மண்டபத்தில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டம் தங்கள் குழந்தைகளுக்குப் பொருத்தமான மற்றும் பயிற்சி பெற்ற பணிப் பெண்களைத் தேடுவதற்கு பெற்றோர்களுக்கு உதவும் என்று யாவாஸ் தலைமை நிர்வாகி கான் பெய் நெய் கூறினார்.

இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்ட பின்னர் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பணிப் பெண்கள் யாவாஸ் அகப் பக்கத்தில் தங்களைப் பதிந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
“தொடக்கக் கட்டமாக ஐ-அசோ திட்டத்தில் 1,000 பணிப் பெண்களைப் பதிவதற்கு நாங்கள் இலக்கு வகுத்துள்ளோம். யாவாஸ் மற்றும் மாநில அரசாங்கத்தின் கீழ் இவர்களுக்கு சிறார் கல்வி குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படும்” என்றார் கான்.


Pengarang :