政府xuanbu 调高甘榜峇鲁地段的收购价,从每平方尺850令吉调至1000令吉。
NATIONAL

கம்போங் பாருவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள்!

கோலாலம்பூர், ஜன.31-

கம்போங் பாரு பகுதி மேலும் நாகரீகமாகவும் சீராகவும் அழகாகவும் காட்சியளிக்க பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் காலீட் அப்துல் சமாட் கூறினார்.
கம்போங் பாரு பள்ளிவாசலில் 9.8 ஹெக்டர் நிலப்பரப்பளவில் மலாய் பாரம்பரிய பூங்கா தோற்றுவிக்கப்பட்டு, அது ஒரு மேம்பாட்டு மையமாக உருவாக்கப்படும் என்றார் அவர்.

“இப்பூங்காவானது மலாக்காவில் உள்ள கம்போங் மார்டன் போன்று அதே வேளையில் அளவில் பெரிதாக இருக்கும். இன்கு மலாய் கட்டுமானக் கலை கொண்டு நிர்மாணிக்கப்படும் வீடுகளோடு தற்போது அங்கிருக்கும் 11 வீடுகளும் தொடர்ந்து பரமாரிக்கப்படும்” என்று அவர் விவரித்தார்.
தற்போது, சலோமா லிங்க் என்று பெயரிடப்பட்டுள்ள பாதசாரி பாலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கேஎல்சிசியுடன் கம்போங் பாருவை இணைக்கும் பகுதியில் அலங்கார விளக்குகளும் பொருத்தப்பட்டு வருகின்றன என்று பெர்னாமா தொலைக்காட்டியில் அளித்த பேட்டியில் காலீட் சமாட் தெரிவித்தார்.

இதனிடையே, இப்பகுதியில் மேலும் சில கட்டுப்படி வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருக்கும் வேளையில், அங்கு அதிகமான பொது போக்குவரத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :