Shukri Mohamad Hamin (tengah) bergambar bersama
PBTSELANGOR

கரிமல வாயு குறைந்த நகரமாக்குவதற்கு பங்காற்றிய 44 பேருக்கு எம்டிஎச்எஸ் அங்கீகாரம்

ஷா ஆலம், ஜன.3-

கோல குபு பாரு நகரை கரிமல வாயு குறைந்த நகரமாக்குவதற்கு பங்காற்றிய 44 பேருக்கு உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிஎச்எஸ்) சிறப்புச் செய்தது. இந்நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ரவாங், டெம்பள்ர் அரங்கில் நடைபெற்றது. அங்கீகாரம் பெறுபவர்களில் அரசு இலாகா, கல்விக் கழகம், தனியார் நிறுவனம், வர்த்தக கடை மற்று அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று எம்டிஎச்எஸ் தலைவர் சுக்ரி முகமது ஹாமிம் கூறினார்.

இதே நிகழ்வில் 2019ஆம் ஆண்டு பசுமை திட்ட விருது உலு சிலாங்கூரை பசுமை திட்டம் கொண்டு மேம்படுத்திய மேம்பாட்டாளர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்றார் அவர்.
உலு சிலாங்கூரை கரிமல வாயு குறைந்த பயனீடு நகரமாக உருவாக்குவதில் இத்தரப்பினரின் பங்களிப்பு அளப்பரியது என்று அவர் சொன்னார்.

இதன் பயனாக, கடந்தாண்டு அக்டோபரில் மலேசிய அனைத்துலக பசுமை தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழல் மாநாட்டில் 2019ஆம் ஆண்டு கரிமல வாயு குறைந்த நகரம் என்று விருது எம்டிஎச்எஸ் பெற்றது என்றார்.


Pengarang :