Habitat kelip-kelip di Kampung Kuantan semakin terancam ekoran pencemaran Sungai Selangor. Foto BERNAMA
RENCANASELANGOR

குப்பை குளமாக” மாறி வரும் சுங்கை சிலாங்கூர்: மின்மினிப் பூச்சுகளின் வாழ்க்கையை சீர்குலைக்குமா?

கோலசிலாங்கூர், ஜன.6-

ஆறுகளின் தூய்மை குறித்து மனிதர்கள் மத்தியில் நீண்ட காலமாக நீடித்து வரும் அலட்சிய போக்கே ஆறுகளின் தூய்மைக்கேடுகளுக்கு காரணமாகும்.
சமுக பொருளாதாரம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு முகவும் முக்கியமான சுங்கை சிலாங்கூர் தற்போது தேவைப்படாத கழிவு மற்றும் நச்சுப் பொருட்களின் குப்பை தொட்டியாக மாறியுள்ளது.

110 கிலோமீட்டர் நீளத்திலான சுங்கை சிலாங்கூர் புக்கிட் பிரேசரில் டொடங்கி கோல குபு பாருவைக் கடந்து பெஸ்தாரி ஜெயா (முன்பு பத்தாங் பெர்ஜுந்தாய்) வரை செல்கிறது. இது சுற்றுச்சூழல் சுற்றுலா தளமாக விளங்கிடும் கம்போங் குவாந்தானையும் கடந்து செல்கிறது.
ஆறுகளின் தூய்மைக்கேட்டை உணர்ந்து, மின்மினிப் பூச்சுகளைப் பேணும் நோக்கத்தில் கம்போங் குவாந்தானைச் சேர்ந்த வாலிபர் மாஸ்புடி அப்துக் மாலேக் (33) தனது கிராம ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக சுற்றுப் பயணிகளின் காரோட்டியாகப் பணிப்புரியும் மாஸ்புடி, இரவு வேளைகளில் மின்மினிப் பூச்சுகளின் காட்சிகளைக் கண்டு களித்தவர்.
இத்துப்புரவு நடவடிக்கையை கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனியாக மேற்கொண்டு மாஸ்புடியின் பணியால் சுங்கை சிலாங்கூர் இறுதிப் பாகம் பளிச்சென்று காட்சியளிக்கிறது.


Pengarang :