PUTRAJAYA, 8 Nov — Menteri Luar Datuk Saifuddin Abdullah menyampaikan ucapan selepas mengikuti siaran langsung Penilaian Berkala Sejagat (UPR) Ketiga Malaysia di Wisma Putra malam ini. Pembentangan UPR itu dibentangkan oleh Ketua Setiausaha Kementerian Luar Datuk Seri Ramlan Ibrahim yang berlangsung di Geneva, Switzerland malam ini. –fotoBERNAMA (2018) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

கொரொனா வைரஸ் விவகாரத்தை இன விவகாரமாக்காதீர்!

ஷா ஆலம், ஜன.31-

கொரொனா வைரஸ் பரவலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இன விவகாரத்துடன் மலேசியர்கள்தொடர்புப் படுத்தக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபூடின் அப்துல்லா கூறினார்.
இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவியுள்ளதால், இந்த இன விவகாரம் எழுப்பப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
“இந்த கொரொனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியுள்ளது உண்மைதான்.

ஆயினும் இதற்கு முன்னர் எபோலா ஆப்ரிக்கா நாட்டில் இருந்தும் வேறுபல கிருமிகள் பல்வேறு நாடுகளில் இருந்து பரவிய போதும் இது போன்ற இன விவகாரம் எழவில்லை” என்று அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, இந்த இன விவகாரத்தை மலேசியர்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று வரை, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,692 என்று பதிவாகியுள்ளது.


Pengarang :