PBTSELANGOR

சட்டவிரோத சிமெண்ட் தொழிற்சாலை: உரிமையாளருக்கு ரிம. 7 ஆயிரம் அபராதம்!

பந்திங், ஜன.10-

ஜெஞ்சாரோமில் அனுமதியில்லாமல் கட்டடத்தை நிர்மாணித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட தொழிற்சாலை உரிமையாளர் ஒருவருக்கு தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 7 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது. சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளருக்கு 1974ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டட சட்டத்தின் 70(13) சி பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் சைஃபுடின் ராஃபீ தண்டனை வழங்கினார்.

“குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 7,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. எந்தவொரு கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஊராட்சி மன்றத் தரப்பிடம் இருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதம் பெற வேண்டும்” என்று அவர் தனது தீர்ப்பில் கூறினார்.

சம்பந்தப்பட்ட விதிமுறையை மீறும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :