Dato’ Seri Amirudin Shari berucap sempena Majlis Makan Malam Bersama Rakyat Selangor Anjuran DAP Kinrara di SJKC Sin Ming, Puchong pada 13 Disember 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

சமூக ஊடகம் வெறுப்பை விதைப்பதற்கான ஒரு தளமல்ல!

ஷா ஆலம், ஜன.6-

சமூக ஊடகத்தை மேலும் ஆக்க்கப்பூர்வமாக பயன்படுத்தும்படி அனைத்து தரப்பினரையும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். சமூக ஊடகமானதை சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தினா. அது பல்வேறு நன்மைகளை அளிக்கும் என்றார் அவர்.

எனினும், தற்போது இந்த ஊடகமானது வெறுப்பு உணர்ச்சியை விதைப்பதற்கும் சைபர் பகடி வதை செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார். சமூகம் ஊடகத்தின் முக்கிய நன்மையானது தொடர்பு இடைவெளியைக் குறைப்பதோடு ஒரு சமூகத்தை உருவாக்குவது ஆகும் என்று அவர் விவரித்தார்.

“ஆயினும், பிறர் மீதான வெறுப்பை தூண்டிவிடுவது ஒரு வகையான பகடி வதை என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று அவர் கேட்டார். எனவே, ஒழுக்கமற்ற அந்நடவடிக்கையை பொது மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதன் வழி சமூக ஊடகமானது எதிர்மறையான விளைவுகளைக் காட்டிலும் ஆக்கப்பூர்வமான பயன்களை அதிகம் ஏற்படுத்தும் என்றார அவர்.


Pengarang :