RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரின் 5 அணைக்கட்டுகளில் நீர் தேக்கம் சிறப்பாக உள்ளன !!!

ஷா ஆலம், ஜன.9-

சிலாங்கூரில் உள்ள ஐந்து அணைக்கட்டுகள் நல்ல நிலையில், குறிப்பாக 100 விழுக்காடு சிறப்பாக உள்ளன. செமினி, லாங்காட், சுங்கை சிலாங்கூர், தாசேக சுபாங் மற்றும் சுங்கை திங்கி நிலையங்களே அவை என்று சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் (லுவாஸ்) அகப்பக்கம் கூறியது.
செமினி அணைக்கட்டில் 59.07 மில்லியன் கன மீட்டர், லாங்காட் நிலையத்தில் 34.10 மில்லியன் கன மீட்டர், சுங்கை சிலாங்கூர் நிலையத்தில் 230 மில்லியன் கன மீட்டர், தாசேக் சுபாங் நிலையத்தில் 4.21 மில்லியன் கன மீட்டர் மற்றும் சுங்கை திங்கி நிலையத்தில் 114.52 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளன.

இதனிடையே, பத்து அணைக்கட்டில் நீர் தேக்க அளவு 31.88 மில்லியன் கன மீட்டர் அல்லது 99.73 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. மற்றொரு நிலவரத்தில் , கிள்ளான் கேட்ஸ் அணைக்கட்டின் நிலையும் சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தீபக்கற்ப மலேசியாவின் வடப் பகுதி மாநிலங்களான கெடா, பேராக், பெர்லிஸ் ஆகியவை உட்பட கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் வறட்சி நிலை காணப்படுவதாக மலேசிய வானிலை ஆராய்ச்சி துறை தலைமை இயக்குநர் கூறினார்.

நாட்டில் தற்போது வடகிழக்கு பருவ மழைக் காலத்தின் இரண்டாம் கட்டத்தில் மழை மேகம் குறைந்துள்ளதால் மார்ச் மாதம் வரையிலும் வெப்ப நிலை அதிகரித்து வறட்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Pengarang :