Murid-murid menikmati sarapan percuma yang disediakan di bawah program Rancangan Makanan Tambahan. Foto BERNAMA
SELANGOR

சிலாங்கூரில் 906 மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி  

ஷா ஆலம், ஜன.21-

மாநிலத்தில் உள்ள 6 பள்ளிகளைச் சேர்ந்த 906 மாணவர்கள் நேற்று தொடங்கிய மறுசீரமைக்கப்பட்ட கூடுதல் உணவு திட்டத்தின் (ஆர்எம்டி) கீழ் பயனடைந்தனர் என்று சிலாங்கூர் மாநில கல்வி இலாகா இயக்குநர் அஸ்மின் மிஸ்ருன் கூறினார்.
காலை 7 மணி தொடங்கி 7.30 மணி வரை 20 வகையான சத்துணவுகள் பரிமாறப்படுவதன் மூலம் மாணவர்கள் சம சத்துள்ள உணவை உட்கொள்வது உறுதி செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

“மாணவர்கள் ஆரோக்கியமான காலை சிற்றுண்டியையும் வாழ்க்கை முறையையும் அமல்படுத்துவதை இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்ய விரும்புகிறோம்” என்றார் அவர்

கோல சிலாங்கூர், ஜெராம் பத்து 20, தேசிய பள்ளி, சபாக் பெர்ணம், யோக் குவான் சீனப் பள்ளி, கோல லங்காட், தஞ்சோங் செப்பாட் சீனப் பள்ளி, பெட்டாலிங் உத்தாமா, புக்கிட் லாஞ்சான் தேசிய பள்ளி, உலு சிலாங்கூர், துன் அப்துல் ரசாக் தேசிய பள்ளி, – சிப்பாங், பண்டார் ரிஞ்சிங் தேசிய பள்ளி ஆகியவையே இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள 6 பள்ளிகளாகும்.


Pengarang :