SELANGORSUKANKINI

சிலாங்கூர் ஆசிய காற்பந்து போட்டி: இளம் ஆட்டக்காரர்களின் திறனை வெளிப்படுத்தும்

ஷா ஆலம், ஜன. 9:

சிலாங்கூர் காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் ஜனவரி 18 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள 2020 ஆசிய காற்பந்து போட்டி, மாநிலத்தின் ரெட் ஜயண்ட் குழுவின் இளம் ஆட்டக்காரர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துவதற்கான சிறந்த தடமாக அமையும். முதல் முறையாக நடைபெறவிருக்கும் பருவத்திற்கு முந்தைய போட்டியில் தென் கிழக்காசியாவின் தலைசிறந்த மூன்று கிளப்புகள் பங்கேற்கவிருப்பதால் ஆட்டங்கள் யாவும் பரப்பரப்பாக இருக்கும் என்று சிலாங்கூர் காற்பந்தாட்ட சங்கத்தின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜோஹான் கமால் ஹமிடோன் கூறினார்.

“வியட்னாமின் ஹனோய் காற்பந்து கிளப், தாய்லாந்தின் பேங்காக் யுனைடெட் கிளப் மற்றும் இந்தோனேசியாவின் பெர்சிப் பாண்டுங் ஆகிய குழுக்கள் தத்தம் நாடுகளில் தலைசிறந்த குழுக்களாகத் திகழ்கின்றன” என்றார்.அவர்.
“ஒவ்வொரு குழுவிலும் இளம் ஆட்டக்காரர்கள் களத்தில் இறங்கவிருப்பதால், இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் ஆட்டங்களில் அனைத்து பதினோரு ஆட்டக்காரர்களும் முக்கிய ஆட்டக்காரர்களாக இருப்பதை உறுதி செய்வது பயிற்சியாளுக்கு சிரமமாக இருக்கும்” என்று சிலாங்கூர் கினியிடம் அவர் விவரித்தார்.

இந்த ஆட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய தமது தரப்பு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக டாக்டர் ஜோஹான் தெரிவித்தார்.
இதனிடையே, இப்போட்டியில் சிறந்த ஆட்டங்களை வழங்க ரெட் ஜயண்ட் குழுவினர் தங்கள் உடலையும் மனதையும் திடமாக வைத்திருக்கின்றனர்.என்றும் அவர் சொன்னார். தாக்குதல் ஆட்டக்காரர் ருஃபினோ செகோவியோ மற்றும் நூர் ஹாசான் ஆகிய இருவரும் ஆட முடியாத நிலையில் இதர ஆட்டக்காரர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என்றார்.

“இந்தப் போட்டியை முதன் முறையாக ஏற்பாடு செய்வது நாம் அனைவரும் பெருமிதம் கொள்வதோடு சிறந்த குழுக்களை எதிர்த்து ஆடும் சிலாங்கூர் குழுவின் ஆட்டங்களைக் காணும் வாய்ப்புகளை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார் அவர்.


Pengarang :