Hee Loy Sian berucap pada Pelancaran Skim Harga Maksimum Musim Perayaan Tahun Baru Cina Peringkat Negeri Selangor di Tesco Extra, Mutiara Damansara, Petaling Jaya pada 20 Januari 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

செராய் இலை ‘பான உறிஞ்சு’ : துல்லித ஆய்வு தேவை!

ஷா ஆலம், ஜன.17-

பானங்களை உறிஞ்சுவதற்கு ‘செராய்’ இலையைப் பயன்படுத்துவதற்கு முன்னர் சிலாங்கூர் அது குறித்து துல்லிதமான ஆய்வு மேற்கொள்வது அவசியமாகும்.
இதை வர்த்தகமாக்குவதற்கு முன்னர் இத்தாவரம் பசுமையாக இருக்கும் கால அளவைக் கணக்கில் கொள்வது முக்கியமாகும் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லொய் சியான் கூறினார்.

“தேவைப் படும் தரப்புகளுக்கு இந்த இலையை விநியோகம் செய்ய முன்வந்திருக்கும் கெமுபு விவசாய மேம்பாட்டு வாரியத்தின் அறிவிப்பை நாம் வரவேற்கிறோம். ஆயினும், இத்தாவரம் எத்தனை காலம் பசுமையாக இருக்கும் என்பதை ஆராய்வது அவசியம்” என்றார் அவர்.

உறிஞ்சானாக செராய் இலையைப் பயன்படுத்துவதற்கு கிளந்தான் மருத்துவமனை கஃபே வரை விரிவாக்கம் செய்ய எண்ணும் அவ்வாரியத்தின் பரிந்துரை குறித்து கருத்துரைக்கையில் ஹீ மேற்கண்டவாறு சொன்னார்.
இதனிடையே, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற ‘காகித உறிஞ்சு’ அல்லது துருப்பிடிக்காத ‘எஃகு உறிஞ்சு’ போன்றவற்றை பயன்படுத்துவத மாநில அரசு விரும்புகிறது என்றார் அவர்.


Pengarang :