Beliau berkata demikian Majlis Perasmian Pelancaran Bas ‘Coaster’ Smart Selangor, di Terminal Bas IOI City Mall di sini semalam.
SELANGOR

செர்டாங் மருத்துவமனை முகப்பிடம் வரை சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் மினி பஸ் சேவை

புத்ராஜெயா, ஜன.15-

பொது மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் சிலாங்கூரில் முதல் மினி பஸ் சேவையை மாநில அரசாங்கம் அறிமுகப்படுத்துகியுள்ளது.
சிப்பாங் நகராண்மைக் கழகப் பகுதியில் செயல்படவிருக்கும் இந்த மினி பஸ் செர்டாங் மருத்துவமனை முகப்பிட வளாகம் வரை பயணிகளைக் கொண்டு செல்லும் என்று ஊராட்சி மன்ற, பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

“இந்தப் பேருந்து அளவில் சிறியதாக இருப்பதால் மருத்துமனை முகப்பிட வளாகத்தில் பயணிகள் ஏற்றவும் இறக்க விடும் வசதியைக் கொண்டுள்ளது” என்றார் அவர். இந்தச் சேவையை பேருந்து வழங்குவதற்கு மருத்துவமனை தரப்பும் ஒத்துழைப்பு நல்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக ஐஓஐ சிட்டி மால் பேருந்து முனையத்தில் இந்தப் பேருந்துச் சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் இங் தெரிவித்தார்.

தொடக்கமாக மக்கள் அதிகம் வசிக்காத பகுதி வழியாக இப்பேருந்து செல்லும் என்றும் மருத்துவமனை மற்றும் பொது இடங்களுக்குச் சென்று வரும் பயணிகளுக்கு இது வசதியாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
“சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கையை இதர ஊராட்சி மன்றங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்” என்றார் அவர்.


Pengarang :