NATIONAL

ஜேபிஜே மூலம் நாட்டிற்கு ரிம. 4.32 பில்லியன் வருவாய்!

ஷா ஆலம், ஜன.23-

சாலைப் போக்குவரத்து இலாகா மூலம் நாட்டிற்கு கடந்தாண்டு 4.32 பில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைத்தது.
முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டின் வருமானம் 1.93 விழுக்காடு உயர்ந்துள்ளதாக சாலைப் போக்குவரத்து இலாகா இயக்குநர் டத்தோஸ்ர் ஷாஹாருடின் காலிட் தெரிவித்தார்.

இதில் 68 விழுக்காட்டு தொகை அல்லது 2.97 பில்லியன் ரிங்கிட் வாகனமோட்டும் உரிமம் வழி கிடைக்கப் பெற்றதாக அவர் விவரித்தார். 2019ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் மொத்தம் 1.406,902 குற்றப் பதிவு அறிக்கைகளை ஜேபிஜே வெளியிட்டது. முந்தைய ஆண்டில் மொத்தம் 1,175,731 குற்றப் பதிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டன என்றார் அவர்.

இந்தக் குற்றப் பதிவு அறிக்கைகளில் 625,326 அறிக்கைகளுக்கான அபராதத் தொகையாக 132 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :