Peserta mengambil bahagian dalam program penanaman pokok di
PBTSELANGOR

தாமான் செரோஜா பொது பூங்காவில் 300 மரங்கள் நடப்படும்!

ஷா ஆலம், ஜன.29-

புக்கிட் செந்தோசா, தாமான் செரோஜா பொது பூங்கா சுற்றுபுறத்தை அழகுப் படுத்தும் வகையில் 300 மரங்கள் நடப்படும் என்று உலு சிலாங்கூர் மாவட்ட மன்றத் தலைவர் சுக்ரி முகமது ஹமிம் கூறினார்.
“யுஎம்டபள்யூ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்தில் பூங்கோர் மற்றும் தாலிபிரித்து போன்ற மரங்கள் நடப்படவுள்ளன” என்றார் அவர்.

“இப்பகுதியின் கால்வாய்களில் சுவேல்ஸ் எனப்படும் பாரம்பரியத் தாவரம் நடப்படுவதன் மூலம் வெள்ளப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படும் என்பதோடு சூரிய ஆற்றலில் இயங்கும் விளக்குகள் பொருத்தப்படவிருக்கின்றன” என்றார்.
இந்நடவடிக்கையின் பொது மக்கள் ஒத்துழைப்பு நல்குவதை ஊக்குவிக்கும் வகையில் 5 ஆயிரம் ரிங்கிட்டுக்கான மாதிரி காசோலை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று சுக்ரி தெரிவித்தார்.


Pengarang :