甘纳巴迪劳。
RENCANA PILIHANSELANGOR

தாமான் ஸ்ரீ மூடா வெள்ள விவகாரம்: செல்காட்டிற்கு கொண்டுச் செல்லப்படும்!

ஷா ஆலம், ஜன.31-

தாமான் ஸ்ரீ மூடா, செக்ஸன் 25 வெள்ள விவகாரம் மீதான தொடர் நடவடிக்கை குறித்து செல்காட் செயற்குழுவில் விவாதிக்கப்படும். செயற்குழுவிடம் இவ்விகாரத்தை எடுத்துச் செல்வதற்கு முன்னர் இது குறித்த விபரப் பட்டியல் அடங்கிய அறிக்கை ஒன்று தயார் செய்யப்படும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வி. கணபதி ராவ் கூறினார்.

“இது குறித்து நான் செல்காட் தலைவர் இங் சுவீ லிம்மிடம் விவாதித்து உள்ளேன். இவ்விவகாரம் குறித்து ஆராயவும் கடந்த ஆண்டைப் போன்று அங்குள்ள மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப் படுவதைத் தவிர்ப்பதற்கான தீர்வை காணவும் இங் இணக்கம் தெரிவித்துள்ளார்” என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

இந்த வெள்ளித்திற்கு கடும் மழையும் காரணம் என்பதை ஒப்புக் கொண்ட போதிலும் பொறுப்பற்ற தரப்பினர் கால்வாய்களில் குப்பைகளை வீசும் நடவடிக்கைகளையும் அவர் கண்டித்தார்.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் அங்கு வெள்ளம் ஏற்பட்டது. அங்குள்ள அனைத்து பம்புகளும் முழு அளவில் செயல்பட்ட போதிலும் இவ்வெள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :