莎阿南市政厅
PBTSELANGOR

தெஸ்கோ செத்தியா ஆலமில் வரும் சனிக்கிழமை எம்பிஎஸ்ஏவின் நடமாடும் அலுவலகம்

ஷா ஆலம், ஜன.13-

இங்குள்ள செக்ஸன் யு13, தெஸ்கோ செத்தியா ஆலம், கார் நிறுத்துமிடத்தில் ‘ஷா ஆலம் ஒன் வீல்” எனும் நடமாடும் அலுவலகம் வரும் ஜனவரி 18ஆம் தேதி செயல்படும்.
இந்த நடமாடும் அலுவலகம் காலை 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரையில் செயல்படும் என்று ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் நிறுவனப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது தெரிவித்தார்.

வார இறுதி நாளில் எம்பிஎஸ்ஏ அலுவலக முகப்புக்குச் செல்லாமல் மாநகராட்சி மன்றத்தின் சேவைகளை பொது மக்கள் பெறுவதற்காக மன்றம் ஏற்பாடு செய்யும் ஒரு தளமாக இந்த நடமாடும் அலுவலகம் அமையும் என்றார் அவர்.
“இங்கு மதிப்பீட்டு வரி செலுத்துவது, அது குறித்து சரிபார்ப்பது, வாகன நிறுத்துமிட அபராதத் தொகை செலுத்துவது, புகார் போன்ற சேவைகள் வழங்கப்படும்” என்று அவர் சொன்னார்.


Pengarang :