Menteri Besar Selangor, Dato’ Amirudin Shari
RENCANA PILIHANSELANGOR

தொழில்முனைவர்களாக வெற்றி பெறுவதற்கு 6 வழிகாட்டிகள் – மந்திரி பெசார்

ஷா ஆலம், ஜன.7-

ஒரு வெற்றி பெற்ற தொழில்முனைவராகத் திகழ்வதற்கு ஒருவரிடம் கடப்பாடும் உயர்ந்த லட்சியங்களை நிறைவேற்றும் தன்முனைப்பும் இருப்பது அவசியம் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த எண்ணம் ஈடேற சம்பந்தப்பட்ட தொழில்முனைவர் கீழ்க்காணும் ஆறு வழிகாட்டிகளை பின்பற்றுவது அவசியமாகும் என்றார் அவர்.

வாடிக்கையாளருக்கும் தயாரிப்பு பொருட்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். சமூக ஊடங்களைப் பயன்படுத்துவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்று அவர் தொடர்ந்தார்.
நான்காவதாக, தயாரிப்பு பொருட்களின் உண்மையான மதிப்பை குறித்து வைத்திருப்பதும் முக்கியம். ஐந்தாவது, பகுதி நேர பணியாளர்களின் உதவியை நாட வேண்டும். இறுதியாக புதியவற்றை தொடர்ந்து பயில்வதும் அவசியமாகும் என்றும் அவர் சொன்னார்.

இந்த வழிக்காட்டிகளைப் பின்பற்றி தொழில்முனைவர்கள் தங்கள் துறைகளில் வெற்றி பெற வேண்டும் எனத் தாம் பிரார்த்திப்பதாக டுவிட்டரில் பதிவிட்ட அறிக்கையில் அமிருடின் கூறினார்.


Pengarang :