ECONOMYNATIONALRENCANA PILIHAN

நாட்டின் பொருளாதாரம் இவ்வாண்டு சிறப்பாக இருக்கும்! – அரசாங்கம் நம்பிக்கை

ஜியார்ஜ்டவுன், ஜன.6-

அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் நாட்டின் பொருளாதாரம் இவ்வாண்டு சிறப்பான வளர்ச்சியைக் காணும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
மதிப்புமிக்க நாடு எனும் அடிப்படையில் மலேசியா அதன் பொருளாதார விவகாரங்களைச் சமாளிக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

முதலீட்டாளர்கள் மட்டுமின்றி அனைத்துலக நிறுவனங்களை நம்பிக்கையை நிலைநிறுத்துவதோடு அதன் நிதிவளம் உட்பட பொருளாதார அடிப்படையும் நிலையாக இருப்பதை உறுதி செய்ய அரசு விரும்புகிறது என்றார் அவர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சு இன்னும் சீராக இருப்பதை நாம் காண முடிகிறது. இவ்வாண்டு 4.7 விழுக்காடு வர்ச்சி அடையும் எனக் கணிக்கப்படுகிறது. இது இதர சில நாடுகளுடன் ஒப்படுகையில் சிறப்பாக உள்ளது என்று அவர் விவரித்தார்.

“ஒரு சில அண்டை நாடுகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால், நமது பொருளாதார நிலை கடந்தாண்டைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்று பினாங்கு தியீங்ஹூவா வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த நிதி அமைச்சுடனான 2020 சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு குறித்த செய்தியாளர் கூட்டத்தில் குவான் எங் தெரிவித்தார்.


Pengarang :