NATIONALRENCANA PILIHAN

பாலியல் தொல்லை சட்டம் மீது அரசாங்கம் கவனம் செலுத்தும்

புத்ராஜெயா, ஜன. 29-

2020 ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை மற்றும் சமூக நிபுணத்துவ பணி மீதான சட்டத்தை அறிமுகப்படுத்துவதில் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. பெண்களின் உரிமை மற்றும் கௌரவ த்தைப் பாதுகாக்கும் பாலியல் தொல்லை சட்ட மசோதா பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளில் அடங்கும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த சட்ட மசோதா வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்ட மசோதாவில் ஒட்டுமொத்த பாலியல் தொல்லை குறித்த அறிமுகம், புகார் வழிமுறைகள் மற்றும் சரியான தீர்வு, தண்டனை ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். அதோடு, பாலியல் தொல்லை புகார் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருத்தமான மற்றும் நியாயமான ஆதாரங்கள் இருப்பதையும் இச்சட்ட மசோதா பரிந்துரை செய்யும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சருமான வான் அஜிஸா விவரித்தார்.


Pengarang :