Projek perumahan
NATIONAL

பிபிஆர் திட்டத்திற்கான வழிகாட்டி ஜூன் மாதம் அறிமுகம்!

புத்ராஜெயா, ஜன.22-

பிபிஆர் எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு வழிகாட்டி அறிமுகப்படுத்தப்படுவதோடு டிமெரிட் எனும் தகுதி குறைப்பு குறியீட்டு முறையும் அமல்படுத்தப்படும் என்றும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.

வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் வழிகாட்டிகளை வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு தயாரித்து வருவதாக அவர் சொன்னார்.
“இந்த வழிகாட்டியில் இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களைத் தெளிவாக ஆராயவும் வீடுகளில் குடியேறுவதற்கு முன்னர் சில பியிற்சிகளில் ஈடுபடுத்தும் நடைமுறைகளையும் உட்படுத்தப்பட்டிருக்கும்” என்றார் அவர்.

அதே வேளையில், வகுக்கப்படும் நடைமுறைகளை மீறுவோரின் தகுதிகளைக் குறைக்கும் டிமெரிட் குறியீடும் அமல்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை வீடுகளை வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அவர் விவரித்தார். இந்த வழிகாட்டி மூலம் தகுதி பெற்றவர்கள் மட்டும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் குடியிருப்பது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.


Pengarang :