NATIONALRENCANA PILIHAN

ரிம.30 மின் பணத்தின் வழி பயனீட்டாளர்கள் பயனடைந்துள்ளனர்!

புத்ராஜெயா, ஜன.23-

மக்கள் மின் பணத் திட்டத்தின் வழி கிடைக்கப் பெற்ற 30 ரிங்கிட்டை சமையல் பொருட்கள், தொலைத் தொடர்பு கட்டணம், போக்குவரத்து மற்றும் உணவுக்காக ப்ரும்பாலான மக்கள் செலவழித்துள்ளனர் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

2020 வரவு செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 450 மில்லியன் ரிங்கிட்டில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி வரை 105 மில்லியன் ரிங்கிட் அல்லது 25 விழுக்காடு செலவிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இத்திட்டத்திற்காக இதுவரை 4.8 மில்லியன் பேர் விண்ணப்பித்துள்ள வேளையில் 3.5 மில்லியன் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று இது மிகவும் உற்சாகம் அளிப்பதாக ஐஒஐ சிட்டி மாலிற்கு மின் பணத் திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வருகை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் லிம் தெரிவித்தார்.

மக்கள் இ- பணப்பையைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் மின் பணம் திட்டத்தில் கிடைக்கப்படும் 30 ரிங்கிட்டை கிராப், பூஸ்ட் அல்லது டச் அண்ட் கோ வழியாக மீட்டுக் கொள்ளலாம் என்றார் அவர்.


Pengarang :