SELANGOR

ரெசிடென்சி ஜெயா வீடமைப்புத் திட்டம்: இழப்பீடு பெற்றுத் தர சிலாங்கூர் அரசு உதவும்!

ஷா ஆலம், ஜன.22-

பாதியில் நின்று போன பலாக்கோங், ரெசிடென்சி ஜெயா வீடமைப்புத் திட்டத்தை நிர்வகிக்க மூன்றாம் தரப்பை தேர்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்ந்தெடுக்கப்படும் தரப்பு வீடமைப்புத் திட்ட நிலங்களை விற்பனை செய்யவதற்கு பொறுப்பேற்பதோடு அந்த விற்பனை வழி கிடைக்கும் பணத்தைக் கொண்டு வங்கியிடம் பெற்ற கடனைத் தீர்க்கவும் வீடுகளை வாங்கியோருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும் என்று வீடமைப்பு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஹனிசா தால்ஹா கூறினார்.

“சம்பந்தப்பட்ட வீடுகளை வாங்கியவர்களுக்கு அவர்களின் பணத்தை திரும்ப ஒப்படைக்க மாநில அரசும் சிலாங்கூர் சொத்துடைமை மேம்பாட்டு வாரியமும் முயன்று வருவதாக” அவர் சொன்னார். ரெசிடென்சி ஜெயா திட்டத்தில் 11 மாடிகளைக் கொண்ட 2 புளோக்குகளில் 394 அபார்ட்மெண்ட்களும் 9 கடை வீடுகளும் ரிம. 210,000 மற்றும் ரிம 250,000 விலையில் விற்க உடன்படிக்கை காணப்பட்டது.
ஆயினும், கடந்தாண்டு அக்டோபர் 25ஆம் தேதி சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர் திவாலாகவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.


Pengarang :