Exco Generasi Muda & Sukan dan Pembangunan Modal Insan, Khairuddin Othman berucap pada sidang akhbar pada Program Larian Menjunjung Kasih di dataran MBPJ, Petaling Jaya. 8 Disember 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

விளையாட்டுத் துறை அடிப்படை வசதிகளை மேம்படுத்த சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ரிம.40 ஆயிரம் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜன.29-

விளையாட்டுத் துறை அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 40,000 ரிங்கிட்டை சிலாங்கூர் ஒதுக்கீடு செய்துள்ளது. மக்கள் மத்தியில் விளையாட்டை ஒரு கலாச்சாரமாக உருவாக்க மாநிலம் கொண்டுள்ள இலக்கிற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் சிறப்பாக இருப்பது உறுதி செய்யப்படும் என்று முகமது கைருடின் ஓஸ்மான் கூறினார்.

“சிறிய விளையாட்டு அரங்கத்தின் வசதிகளை அதிகரிப்பது உட்பட காற்பாந்து மற்றும் புட்சால் திடங்களின் தரத்தை மேம்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்” என்றார். விளையாட்டு துறை கலாச்சாரத்தைத் துரிதப் படுத்தும் வகையில். சிலாங்கூர் இளைய தலைமுறை விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய ஒவ்வோர் ஊராட்சி மன்றத்திற்கும் 20 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :