Dato’ Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari bersalaman dengan Imam Besar Masjid Sultan Salahuddin Abdul Aziz Shah, Ustaz Muhammad Farhan Wijaya pada Majlis Perhimpunan Agensi Agama Islam Selangor Auditorium, Dewan Syarahan dan Muzakarah Masjid Sultan Salahuddin Abdul Aziz Shah, Shah Alam pada 28 Januari 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

விஸ்மா புத்ரா ஆலோசனையின் பேரில் வெளிநாடுகளுக்கான அலுவல் பயணம் தொடரும்

ஷா ஆலாம், ஜன.28-

விஸ்மா புத்ராவின் ஆலோசனையின் பேரில் மாநில அரசாங்கம் வெளிநாடுகளுக்கான அலுவல் பயணத்தைத் தொடரும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். 2019 கொரோனா தொற்று நோய் பரவல் விவகாரத்தைத் தவிர்த்து எந்தவொரு வெளிநாட்டு அலுவல் பயணமாக இருந்தாலும் மாநில அரசாங்கம் விஸ்மா புத்ராவின் ஆலோசனையைப் பெறுவது வழக்கம் என்று அமிருடின் குறிப்பிட்டார்.

“ஆபத்து குறைந்த இடங்களுக்கு எங்கள் பயணத்தை நாங்கள் தொடர்வோம். மேல் நடவடிக்கைகள் குறித்து மறு ஆய்வு செய்வதோடு ஆலோசனைகளைப் பெறுவதற்காக அவ்வப்போது புத்ராவுடன் தொடர்பு கொள்வோம்” என்றார் அமிருடின்.
“ஒவ்வோர் இடம் மற்றும் பிரச்னை குறித்து விஸ்மா புத்ரா ஆகக் கடைசியான் தகவல்களைக் கொண்டிருக்கும்.

இப்பிரச்னையை நம்மால் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று இங்கு ஷா ஆலாம் விரிவுரையாளர் மண்டபத்தில் இஸ்லாமிய சமய நிறுவன பேரணி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இத்தகவலை வெளியிட்டார்.


Pengarang :