EXCO Kerajaan Negeri, Khairuddin Othman ketika ditemui media selepas Majlis Perasmian Anime dan Gaming One Belt One Road (OBOR) pada 12 Oktober 2019.Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

100 நாட்களில் அங்கீகாரம்’ கொள்கை: இளைஞர்களுக்கு நன்மை அளிக்கும்!

ஷா ஆலம், ஜன.27-

‘100 நாட்களில் அங்கீகாரம்’ எனும் கொள்கையானது சிலாங்கூர் இளைஞர்களுக்கான பல்வேறு வர்த்தக மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் என்று மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துஏறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓஸ்மான் கூறினார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரில் எவரையும் மாநில அரசு ஒதுக்கியதில்லை மாறாக அமல்படுத்தப்படும் கொள்கைகள் யாவும் அவர்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்து வந்துள்ளது என்றார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் இந்த 100 நாட்கள் அங்கீகாரத் திட்டமானது மாநில மேம்பாட்டை மேலும் துரிதப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, நில மேம்பாட்டுகளுக்கான அங்கீகாரம் 100 நாட்களில் கிடைப்பதை இந்தக் கொள்கை உறுதி அளிக்கிறது. முன்பு, இந்த அங்கீகாரம் கிடைக்க 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :