Penguat kuasa MPK menyita premis yang memproses ayam hidup secara haram. Foto ihsan MPK
PBTSELANGOR

5 சட்ட விரோத கோழி வளர்ப்பு தொழிற்சாலைகள்: எம்பிகே பறிமுதல் செய்தது

கிள்ளான், ஜன.27-

இங்குள்ள பண்டார் சுல்தான் சுலைமானில் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்த 5 கோழி பண்ணைகளை கிள்ளான் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது என்று எம்பிகே அமலாக்க பிரிவு இயக்குநர் என்றி அர்மான் மாஸ்ரோம் கூறினார்.  பொது மக்கள் அளித்த புகாரின்பேரில் மேற்கொண்ட புலனாய்வைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு எம்பிகே துணை சட்ட விதிகளின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த இடங்கள் மிகவும் அசுத்தமாகவும் அருவருப்பாகவும் இருந்தன. மேலும் கோழி இறைச்சிகள் விற்க மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருந்த வேளையில் இவை கோழிகள் வளர்ப்பிலும் ஈடுபட்டிருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஐந்து இடங்களில் ஒன்று 2004ஆம் ஆண்டு தொடங்கி சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், எஞ்சியவை ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்றார் அவர்.


Pengarang :