ECONOMYNATIONAL

அடுத்த 20 ஆண்டுகளில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு 4,500 விமானங்கள் தேவைப்படும்!

கோலாலம்பூர், பிப்.12-

அடுத்த 20 ஆண்டுகளில் தென் கிழக்காசிய விமான நிறுவனங்களுக்கு 4,500 விமானங்கள் தேவைப்படும் என்று போயிங் விமான வெளியிட்டு நிறுவனம் கணித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 710 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்றும் கூறுகிறது.
ஒரே தடம் கொண்ட விமானங்களே தென்கிழக்காசிய தேவைகளுக்கு அதிகம் நாடப்படுவதாக அது தெரிவித்தது.

இந்த வளர்ச்சி காரணமாக வர்த்தக ரீதியான விமான சேவைகளுக்கான தேவை 2019 ஆம் 2038 ஆம் ஆண்டுக்கும் இடையில் 785 பில்லியன் அமெரிக்க டாலரை மிஞ்சும் எனவும் கணிக்கப்படுகிறது.
“2010ஆம் ஆண்டு தொடங்கி வியட்னாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய ஆகிய 3 நாடுகளும் அதிக எண்ணிக்கையிலான இருக்கைகள் கொண்ட விமானங்களைக் கோரும் முதல் 10 நாடுகளில் இடம்பெற்றுள்ளன” என்று வர்த்தக சந்தை பிரிவுத் தலைவர் ரெண்டி தின்செத் கூறினார்.

அந்த மூன்று நாடுகளில், ஒவ்வோர் ஆண்டும் 15 விழுக்காடு வளர்ச்சியை வியட்னாம் பதிவு செய்து வந்துள்ளது. இதை அடுத்து தாய்லாந்தும் இந்தோனேசியாவும் 10 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன.


Pengarang :