NATIONALRENCANA PILIHAN

காவல் துறை குடியிருப்பு பகுதி மின் தூக்கிகள் பழுது பார்க்கவும் மாற்றவும் ரிம 122 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், பிப்.20-

போலீஸ் குடியிருப்புப் பகுதி மற்றும் கட்டடங்களில் உள்ள மின் தூக்கிகளைப் பழுது அல்லது புதிதாக மாற்றுவதற்கும் 122 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார். அந்தத் தொகையில் தற்போது 201 மின் தூக்கிகள் பழுது பார்க்கப்பட்டு வருகின்ற வேளையில் 41 புதிய மின் தூக்கிகளுக்கான டெண்டர் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

மின் தூக்கிகள் எந்நேரமும் சீராகச் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் போலீஸ் பயிற்சி மையமும் (புலாபோல்) கோலாலம்பூர் போலீஸ் தலைமையகமும் நம்பகத்தின்மை மிக்க பராமரிப்பு குத்தகையாளரைத் தேர்வு செய்யும்படி தாம் பணித்துள்ளதாக அவர் சொன்னார்.

“பெரும்பாலான மின் தூக்கிகள் சரிவரச் செயல்படாததற்கு அவை முறையாக பரமாரிக்கப்படாததே காரணம்” என்று கண்டறியப்பட்டுள்ளது என்று தலைநகர் புலாபோலில் புதிய மின் தூக்கியைத் தொடக்கி வைத்த நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.


Pengarang :