KPDNHEP merampas 37 pek cecair pembasmi kuman seberat lima liter setiap satu dianggarkan bernilai RM8,436 dalam serbuan pada 13 MAC 2020. Foto: BERNAMA
NATIONAL

கிருமி நாசினி திரவத்தின் விலை 100% அதிகரிப்பா?

கோலாலம்பூர், பிப்.14-

கிருமி நாசினி திரவத்தின் விலையை கடந்த இரண்டு வாரங்களில் 100 விழுக்காடு அதிகரித்த காஜாங்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இணைய வழி விற்பனை கிருமி நாசினி திரவத்தின் விலையை சம்பந்தப்பட்ட நிறுவனம் அதிகரித்தது குறித்து பொது மக்கள் செய்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சின் அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் அஸ்மான் அடாம் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணையத் தள விற்பனையை கண்காணித்ததில் ரிம 112 என்ற விலையில் முன்பு விற்கப்பட்ட 5 லிட்டர் கிருமி நாசின் திரவம் திரு வாரங்களுக்கு முன்னர் ரிம118 ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது என்று அவர் சொன்னார். அதே பொருள் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் 100 விழுக்காடு அதிகரிப்பட்டு ரிம 228 என்ற விலையில் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, இந்தத் திரவம் கொண்ட 5 லிட்டர் 37 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரிம. 8,436 ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :