Ahli Dewan Negeri Subang Jaya, Michelle Ng Mei Sze (kiri) menunjukkan penghadang jalan yang dibina MPSJ di hadapan kawasan Sekolah Menengah Kebangsaan Subang Utama, SS18/1B, Subang Jaya. 14 Febuari 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

சுபாங் ஜெயா இடைநிலைப் பள்ளி பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க சாலைத் தடுப்புச் சுவர்

ஷா ஆலம், பிப்.14-

சுபாங் உத்தாமா தேசிய இடைநிலைப் பள்ளியின் முன்புறம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்க 75 மீட்டர் நீள சாலைத் தடுப்பை சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் நிர்மாணித்துள்ளது என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் இங் மெய் ஸி கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் நிறைவுற்ற சாலைத் தடுப்பு நிர்மாணிப்பினால், பள்ளிப் பிள்ளைகளை ஏற்றி அல்லது இறக்கும் வேளையில் பெற்றோர்கள் தங்கள் வாகனங்களைச் சாலையோரம் நிறுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
சாலையோரத்தில் அவர்கள் வாகனங்களை நிறுத்துவதால் அவர்களின் உயிருக்கு மற்றுமின்றி பிற வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்று அவ்ர் குறிப்பிட்டார்.

எதிர்பாராத சம்பவம் ஏது நிகழ்வதற்கு முன்னரே இந்தத் தடுப்பு நிர்மாணிப்புக்கு ரிம.18 ஆயிரம் ஒதுக்கீடு செய்த எம்பிஎஸ்ஜே தரப்புக்கு தாம் நன்றி கூறுவதாக அவர் சொன்னார். சுபாங் உத்தாமா இடைநிலைப் பள்ளிக்கூடப் பகுதியை எம்பிஎஸ்ஜே மன்ற உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதி மற்றும் பள்ளியின் ஆசிரியர்களோடு பாரவையிட்ட போது அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.


Pengarang :