Stadium Sultan Suleiman yang dinaik taraf sejak setahun lalu dilengkapi pelbagai kemudahan untuk keselesaan orang ramai. Foto ASRO SAPFIE/SELANGORKINI
PBTRENCANA PILIHANSELANGOR

சுல்தான் சுலைமான் ஸ்டேடியம் மீண்டும் திறக்கப்பட்டது!

கிள்ளான், பிப்.5-

தரம் உயர்த்தப்படுவதற்காக கடந்த ஓராண்டு காலமாக மூடப்பட்டிருந்த சுல்தான் சுலைமான் ஸ்டேடியம் மக்கள் பயனீட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவர் எலியா மரினி டர்மின் கூறினார்.
“ஒவ்வொரு நாளும் காலை 6.30 மணி தொடங்கி 10 மணி வரையிலும் மாலை மணி 4 தொடங்கி இரவு 7 மணி வரையிலும் பொது மக்கள் இவ்வரங்கத்தில் மெது ஓட்டம் போன்ற பயிற்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்” என்றார் அவர்.

“இவ்வரங்கத்தில் உள்ள ஓடும் தடங்களை மட்டும் பொது மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். காற்பந்து திடலின் புற்கள் இன்னும் வளராத காரணத்தில் அதனைப் படுத்த அனுமதி வழங்கப்படவில்லை” என்று கடந்த பிப்ரவரி முதல் நாள் நடைபெற்ற சுல்தான் சுலைமான் அரங்கத் திறப்பு விழாவின் போது அவர் மேற்கண்டவற்றை தெரிவித்தார்.

மாநிலத்தின் விளையாட்டாளர்களின் வசதிக்காகவும் மக்களுக்கு உடல் பயிற்சிகளின் முக்கியவத்தையும் ஊக்குவிக்க இங்கு பல்வேறு வசதிகளை செய்ய தனது தரப்பு கடப்பாடு கொண்டுள்ளதாக எலியா கூறினார்.


Pengarang :