EXCO Sukan Mohd Khairuddin Othman ketika ditemui media selepas upacara pelepasan (Flag off) peringkat ke-5 Le Tour De Langkawi 2020 di Kuala Kubu Bharu pada 11 Februari 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

சோப்மா விளையாட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு தொகை: சிலாங்கூர் பரிசீலிக்கும்

ஷா ஆலம், பிப்.11-

மலேசிய காது கேளாதோர் விளையாட்டு போட்டியில் (சோப்மா) பதக்கங்களைப் பெறும் விளையாட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குவது குறித்து சிலாங்கூர் பரிசீலித்து வருகிறது என்று விளையாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓஸ்மான் கூறினார்.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளை (ஓகேயு) மாநில அரசாங்கம் எப்போதும் ஊக்குவித்து வந்துள்ளது என்றார் அவர்.

“ சோப்மா உட்பட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இத்தரப்பினரை மாநில அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றார்.
“அதே வேளையில், இத்தரப்பினரின் விளையாட்டு சங்கங்களுக்கும் உதவ நாங்கள் தயாராக உள்ளோம். பங்கேற்கும் விளையாட்டாளர்கள் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துவதே இதில் முக்கியமாகும்” என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :