SELANGOR

தடைப்பட்டு போன வீடமைப்புத் திட்டங்களுக்குத் தீர்வு காண நடப்பு சட்ட திட்டங்கள் மேம்படுத்தப்படும்

ஷா ஆலம், பிப்.13-

தடைப்பட்டு போன வீடுகள் நிர்மாணிப்பு திட்டங்களின் அசல் ஆவணங்கள், நிதி மற்றும் மேம்பாட்டு அனுமதி மாற்றம் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வீடமைப்புத் திட்டங்களின் சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேம்படுத்தி வருகிறது.
புதிய அல்லது பழைய வீடமைப்புத் திட்டம் என்ற பேதமில்லாமல், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதில் சிலாங்கூர் அரசாங்கம் தீவிரமாக இருப்பதை இது வெளிப்படுத்துவதாக வீடமைப்புத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிஸா தால்ஹா கூறினார்.

தடைப்பட்டு போன வீடமைப்புத் திட்டங்களின் விவரங்களை ஆராய ஊராட்சி மன்ற தடைப்பட்டு போன வீடமைப்பு மறு சீரமைப்பு செயற்குழு மூலம் அனைத்து ஊராட்சி மனறங்களுக்கு கடந்தாண்டு தான் வருகை மேற்கொண்டதாக் அவர் சொன்னார்.
“ஒவ்வோர் ஊராட்சி மன்றமும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய திட்டங்களைப் பட்டியலிட்டதுடன் அவற்றின் மறுசீரமைப்புக்கு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது” என்றார் அவர்.

“இதுவரை சிலாங்கூரில் மொத்தம் 32,755 வீடுகளை உட்படுத்தும் 159 வீடமைப்புத் திட்டங்கள் தடைப்பட்டு நின்றுள்ளன என்றும் அவற்றுள் பெரும்பாலானவை 90ஆம் ஆண்டு தொடக்கத்தில் கட்டப்பட்டவை” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :