PBTSELANGOR

தடைவிதிக்கப்பட்ட பகுதியில் குப்பையை வீசினார்: வீடு தேடிச் சென்றது அபராத அறிக்கை !

கோம்பாக், பிப்.20-

அண்மையில் தாமான் ஸ்ரீ கோம்பாக், நவீன சந்தை பகுதியில் குப்பை வீசத் தடை விதிக்கப்பட்ட இடத்தில் குப்பையை வீசிய லாரி ஓட்டுந்ர ஒருவருக்கு செலாயாங் நகராண்மைக் கழகம் அபராத அறிக்கையை வழங்கியது. அந்த நபரின் பொறுப்பற்ற அச்செயல் அப்பகுதியில் பொருந்தப்பட்டிருந்த ரகசிய காமிராவில் பதிவாகியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று முகமது ஜின் மாசோட் தெரிவித்தார்.

“அந்தப் பதவில் சம்பந்தப்பட்ட வாகனப் பதிவு எண் பதிவாகிய்ரிந்தைக் கொண்டு எம்பிஎஸ் தரப்பினர் அவரது இருப்பிடத்திற்கு சென்று அபராத அறிக்கையை வழங்கினர்” என்றார் அவர். 2007ஆம் ஆண்டு எம்பிஎஸ் குப்பை சேகரிப்பு, வீசுத்தல் மற்றும் அழித்தல் சட்டத்தின் கீழ் அந்த அபராத அறிக்கை வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இதைத் தொடந்து மேலும் பல பகுதிகளை ரகசிய ஒளிப்பதிவு காமிராக்களைப் பொருத்த எம்பிஎஸ் எண்ணம் கொண்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :