Exco Kerajaan Negeri Selangor, Ng Sze Han bercakap pada sidang media Mesyuarat Jawatankuasa Tetap Kerajaan Tempatan Negeri Selangor Bil. 1/2020 di Ibu Pejabat MBPJ, Petaling Jaya pada 18 Februari 2020. Foto HAFIZ OTHMAN
RENCANA PILIHANSELANGOR

திடக் கழிவு சட்டம்: புத்ராஜெயாவின் பதிலுக்காக சிலாங்கூர் காத்திருக்கிறது

பெட்டாலிங் ஜெயா, பிப்.18-

மாநிலம் சுயமாக திடக் கழிவு பொருட்களை நிர்வகிப்பது தொடர்பிலான சட்டத் திருத்தம் குறித்த கூட்டரசுவின் முடிவுக்காக மாநில அரசாங்கம் காத்திருக்கிறது என்று ஊராட்சி துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார். அதிகளவில் திடக் கழிவு பொருட்கள் மாநிலத்தில் உள்ளதால், அவை தொடர்பிலான அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு காண உதவக் கூடிய சம்பந்தப்பட்ட சட்டத் திருத்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும்  என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள திடக் கழிவு பொருட்களின் அளவு வேறுபட்டுள்ளன. எனவே சில சட்டத் திட்டங்கள் பொருத்தமானதாக இருக்கும் , இதர மாநிலத்துக்கு பொருத்தமில்லாததாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
“கூட்டரசு அரசாங்கம் கோரும் திடக் கழிவு நிர்வாகம் மற்றும் பொது துப்புரவு சட்டத்தை அமல்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை சிலாங்கூர் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.


Pengarang :